இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 18, 2021

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம்

இரத்தினபுரி மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள், தாய்மார்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பலருக்கு எலிக் காய்ச்சல் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட தொற்று நோய் விசேட வைத்தியர் லக்மால் கோனார தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட இணைப்பு கமிட்டி கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நூற்றுக்கு 50 வீதம் பரவுகின்ற நிலைமை உருவாகியுள்ளதாக கடந்த மூன்று ஆண்டுகளுக்குரிய தரவுகளை பரிசோதனை செய்தபோது அறிய முடிந்துள்ளது.

இவ்வருடத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் நோயாளர்கள் 379 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக டாக்டர் லக்மால் கோனார கூட்டத்தில் தெரிவித்தார். 

2019 ஆம் ஆண்டில் இம்மாவட்டத்தில் 821 எலிக் காய்ச்சல் நோயாளர்களும், 2020 ஆம் ஆண்டில் 1184 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவர்களில் நூற்றுக்கு 50 வீதமானோர் சேற்றிலே வேலை செய்யும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், இரத்தினக்கல் அகழ்வோர் என தெரிவித்த வைத்திய அதிகாரி ஏனைய 50 வீதமானவர்கள் சேற்றிலே இறங்கும் பாடசாலை மாணவர்கள், தாய்மார்கள் மற்றும் சாரதிகள் ஆகியோரெனவும் அவர் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

(பலாங்கொடை நிருபர்)

No comments:

Post a Comment