ஒக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த சுற்றுலாத்துறை இப்போது படிப்படியாக மீண்டு வருகிறது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 45 ஆயிரத்து 413 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் 7 ஆயிரத்து 96 பேர் ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை நாட்டிற்கு வந்துள்ளனர்.
பெரும்பாலான வருகைகள் ஜனவரி முதல் ஒக்டோபர் வரை இருந்தன. இந்தியா, கஸகஸ்தான், ஜெர்மனி, உக்ரைன், அமெரிக்கா, சீனா, கனடா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கான சாத்தியம் அதிகரித்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நாட்டிற்கு அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்க தேவையான விளம்பர திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment