சவூதி ஆரேபியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் கொரோனா தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளில் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்நாட்டில் நோய்த் தொற்று எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு தடுப்பூசி வழங்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு மக்கா மற்றும் மதீனாவில் உள்ள இரு புனித பள்ளிவாசல்களிலும் முழு அளவில் வழிபாட்டாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் முழுமையாக தடுப்பு மருந்து பெற்றவர்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக சவூதி உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு மூடப்பட்ட இடங்கள், ஒன்றுகூடல்கள், போக்குவரத்து, உணவகங்கள் மற்றும் திரையரங்குகளுக்குச் செல்லவும் சவூதி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
திறந்த பொது வெளிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. ஆனால் மூடப்பட்ட இடங்களில் அந்தக் கட்டுப்பாடு தொடர்ந்து அமுலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சவூதியில் கடந்த சனிக்கிழமை முடிவடைந்த 24 மணி நேரத்தில் 48 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment