விவசாயிகள், மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குங்கள் - வேண்டுகோள் விடுத்துள்ள சாணக்கியன் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 16, 2021

விவசாயிகள், மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குங்கள் - வேண்டுகோள் விடுத்துள்ள சாணக்கியன்

விவசாயிகள் மற்றும் மீனவர்களின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வட மாகணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனினால் முன்னெடுக்கப்படும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பிரதேசரீதியாக மேற்கொள்ளும் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் முழு ஆதரவுடன் மட்டக்களப்பிலும் எதிர்வரும் 18.10.2021 அன்றிலிருந்து நடாத்துவதாக தீர்மானித்துள்ளார்கள்.

இவ் கவனஈர்ப்பு போராட்டமானது தரை மற்றும் கடல் வழி என நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், வெல்லாவெளியில் காலை 08.00 மணிக்கும், கொக்கட்டிச்சோலையில் 8.30 மணிக்கும், ஆயித்தியமலையில் 9.30 மணிக்கும், வந்தாறுமூலையில் 10.30,மணிக்கும், கிரானில் 11.30,மணிக்கும் என ஐந்து இடங்களில் விவசாயிகளால் கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெறும்.

அந்தந்த பகுதி பிரதேச தவிசாளர்கள் உறுப்பினர்கள், தமிழ்தேசியகூட்டமைப்பு உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சி தொகுதி கிளை, பிரதேச கிளை உறுப்பினர்கள், வாலிபர் அணி உறுப்பினர்கள், மகளீர் அணி உறுப்பினர்களும் உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பு பங்காளிகட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

வட கிழக்கு மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரங்களை காப்பாற்றும் போராட்டங்களிற்கு அனைவரையும் அணிதிரளுமாறு பாராளுமன்ற உறுப்பினனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment