ஹக்கீமிடம் முஸ்லிம் விவகாரங்களை கேட்டறிந்தது ஐரோப்பிய ஒன்றியம் : அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை குறித்து விசேட கரிசனை - News View

About Us

About Us

Breaking

Sunday, October 3, 2021

ஹக்கீமிடம் முஸ்லிம் விவகாரங்களை கேட்டறிந்தது ஐரோப்பிய ஒன்றியம் : அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை குறித்து விசேட கரிசனை

இலங்­கையின் மனித உரிமை நிலை­வ­ரங்­களில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றங்கள் குறித்து ஆராய்­வ­தற்­காக வருகை தந்­துள்ள ஐரோப்­பிய ஒன்­றிய பிர­தி­நி­திகள் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்கும் மனித உரிமை நெருக்­க­டிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்­தி­யுள்­ளனர்.

முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் மற்றும் சிவில் பிர­தி­நி­தி­களைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ள ஐரோப்­பிய ஒன்­றிய தூதுக் குழு­வினர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன மத ரீதி­யான வெறுப்புப் பேச்­சுக்கள், பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்­டு­க­ளின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­களின் நிலை­மைகள், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ரான நிலை­மைகள், காணிப் பிரச்­சி­னைகள், கொவிட் ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்யும் விவ­காரம், முஸ்லிம் தனியார் சட்ட விவ­காரம் உட்­பட பல முக்­கிய விவ­கா­ரங்கள் குறித்து கேட்­ட­றிந்­துள்­ளனர்.

அத்­துடன் நீதி­ய­மைச்சர் அலி சப்­ரி­யையும் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடாத்­திய தூதுக்­கு­ழு­வினர், நாட்டில் மனித உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்­காக நீதி­ய­மைச்­சினால் முன்­னெ­டுக்­கப்­படும் நட­வ­டிக்­கைகள் குறித்தும் கேட்­ட­றிந்து கொண்­டனர்.

ஐரோப்­பிய ஒன்­றியம் ஏற்­க­னவே தனது அறிக்­கையில் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் ஆகியோர் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து தனது கரி­ச­னையை வெளி­யிட்­டி­ருந்­தது. இந் நிலையில் இலங்கை வந்­துள்ள தூதுக்­கு­ழு­வி­னரும் இவர்­க­ளது வழக்­கு­களின் முன்­னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்­தி­யுள்­ளனர்.

முஸ்லிம் காங்­கிரஸ் உட­னான சந்­திப்பு
பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ், கவிஞர் அஹ்னாப் உட்­பட பல இளை­ஞர்கள், பெண்கள், முதி­ய­வர்கள் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­புள்­ள­வர்கள் எனக்­கூறி தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். உரிய குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­ப­டா­த­வி­டத்து அவர்­களை விடு­விக்க அவ­சர நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­ வேண்­டு­மெ­னவும் அதற்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்­டு­மெ­னவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தன்னைச் சந்­தித்த ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் உயர்­மட்ட தூதுக்­கு­ழு­வி­ன­ரிடம் வேண்­டு­கோள்­வி­டுத்தார்.

இந்தச் சந்­திப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மை­யகம் தாருஸ்­ஸ­லாமில் இடம்­பெற்­றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நிசாம் காரி­யப்­பரும் இச்­சந்­திப்பில் கலந்து கொண்­டி­ருந்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் இச்­சந்­திப்பு தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கையில் “இந்­நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக நடை­பெற்­று­ வ­ரு­கின்ற மிக மோச­மான மனித உரிமை மீறல்கள் சம்­பந்­த­மாக ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தூதுக்­குழு எமது அபிப்­பி­ரா­யத்தை வின­வி­யது. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தைப் பயன்­ப­டுத்தி அர­சியல் ரீதி­யான பலரை பழி­வாங்கும் முயற்­சிகள் இடம்­பெ­று­கின்­றமை குறித்து விளக்­கினோம்.

குறிப்­பாக சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் போன்­ற­வர்கள் தகுந்த கார­ண­மின்றி, சோடிக்­கப்­பட்ட கார­ணங்­களை காட்டி சுமார் ஒன்­றரை வரு­டங்­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். சட்­டத்­த­ரணி ஒரு­வரை இவ்­வ­ளவு காலம் தடுத்­து­வைத்­தி­ருப்­பது ஒரு பழி­வாங்கும் முயற்சி என ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை ஒன்று தொடர்­பா­கவும் தெரி­வித்தோம்.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் சமூகம் இணக்கம் கண்­டுள்­ளது. இந்­நி­லையில் அரசு இதில் தலை­யிட்டு காதி­நீ­தி­மன்ற முறை­மையை இல்­லாமற் செய்யும் முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ளது. இம்­மு­றைமை இல்­லாமற் செய்­யப்­ப­டக்­கூ­டாது. மாறாக சட்­டத்­தி­ருத்­தங்­களே கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்­டு­மென நாம் தூதுக்­கு­ழு­வி­ன­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளோம். இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களைப் பறிக்கும் விட­ய­மாக மாறி­விட இட­ம­ளிக்­கக்­கூ­டாது எனவும் வேண்­டி­யுள்ளோம்.

மதகு­ரு­மார்கள் வெறுப்­பூட்­டு­கின்ற பேச்­சுக்­களை பேசு­வ­தற்கு தூண்­­டப்­ப­டு­வதும் செயற்­ப­டுத்­து­வதும் சம்­பந்­த­மாக அவர்­களை தண்­டிப்­பது என்­பது ஒரு­புறம் இருக்க அவர்­க­ளுக்­கான அனு­ச­ரணை வழங்­கு­வதை இந்த அர­சாங்கம் தவிர்த்­துக்­ கொள்­வதை வெளிப்­ப­டை­யா­கவே இவ்­வி­ட­யத்தில் காண்­பித்தல் வேண்டும். அரச சார்பு ஊட­கங்கள் தான் இதற்­கான சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்திக் கொடுக்­கின்­றன என்­ப­தையும் தூதுக் குழு­விடம் முன் வைத்­துள்ளோம்.

இந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம் பெறு­வதை தடுப்­ப­தற்கு அர­சாங்கம் மேற்­கொள்­ள­வுள்ள நட­வ­டிக்­கை­களைப் பொறுத்தே ஜி.எஸ்.பி. சலு­கைகள் நீடிக்­கப்­ப­டலாம். அதனால் அர­சாங்­கத்தின் அண்­மைக்­கால நட­வ­டிக்­கைகள் யாவும் திருப்­தி­க­ர­மாக இல்லை என எங்­க­ளு­டைய முறைப்­பா­டு­களைச் செய்­தி­ருக்­கின்றோம். 

எனவே இது சம்­பந்­த­மாக மாற்று நட­வ­டிக்­கை­களை ஐரோப்­பிய ஒன்­றியம் மேற்­கொள்­வதன் மூலம் அர­சாங்­கத்தை சரி­யான பாதையில் கொண்டு செல்ல முயற்­சிக்­கலாம் எனத் தெரி­வித்­தி­ருக்­கிறோம்.

அத்­தோடு சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுக்கு விரைவில் பிணை வழங்­கப்­பட்டு பின்பு தேவை­யேற்­படின் கொள்வதன் மூலம் அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறோம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­சு­ட­னான சந்­திப்பில் அக்கட்­சியின் ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் கலந்து கொள்­ள­வில்லை. இவர்கள் 20 ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­ததைத் தொடர்ந்து அர­சாங்­கத்­திற்கு சார்­பான தனி­யான அணி­யாக செயற்­பட்டு வரு­கின்­றனர்.

Vidivelli

No comments:

Post a Comment