தடுப்பூசி போடாதவர்களுக்கு வேலையில்லை - News View

Breaking

Tuesday, October 12, 2021

தடுப்பூசி போடாதவர்களுக்கு வேலையில்லை

நியூசிலாந்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோருக்கு வேலை அளிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலைத் தவிர்க்கவே அத்தகைய கடுமையான கட்டுப்பாட்டை நடப்புக்குக் கொண்டுவந்திருப்பதாக நியூஸிலாந்து கல்வி, கொவிட்-19 நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் விளக்கினார்.

வரும் டிசம்பர் முதலாம் திகதிக்குள் மருத்துவர்கள், தாதியர் உட்பட அனைத்து முன்னணி ஊழியர்களும் இரு முறை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்களுடன் பழக வேண்டிய நிலையில் உள்ள கல்வித்துறை ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்குள் இரு முறை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

நியூஸிலாந்தில் உள்ள உயர்நிலை பாடசாலைகள், மாணவர்கள் தடுப்பூசி பெற்றதற்கான பதிவேட்டை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தடுப்பூசி போட்டுக் கொள்வது வைரஸ் தொற்றிலிருந்து அதிகப் பாதுகாப்பு வழங்கும் என்று ஹிப்கின்ஸ் குறிப்பிட்டார். 

நியூஸிலாந்தில் நேற்று 35 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு ஒக்லாந்து பாடசாலை திறக்கும் திகதி மேலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment