சட்டவிரோதமாக கடல் வழியாக வௌிநாடு செல்ல முயற்சித்த 4 வயது குழந்தை பெண் ஒருவர் உள்ளிட்ட 65 பேர் கைது - News View

Breaking

Tuesday, October 12, 2021

சட்டவிரோதமாக கடல் வழியாக வௌிநாடு செல்ல முயற்சித்த 4 வயது குழந்தை பெண் ஒருவர் உள்ளிட்ட 65 பேர் கைது

சட்டவிரோதமாக கடல் வழியாக வௌிநாடு செல்ல முயற்சித்த 4 வயது குழந்தை உள்ளிட்ட 65 பேர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலுக்கமைய, திருகோணமலை, உள் துறைமுக வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 63 ஆண்கள், ஒரு பெண் மற்றும் 4 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்த உலர் உணவு பொருட்கள் மற்றும் ஆடைகளை பொலிசார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கையின் பின்னணியில் செயற்பட்டு வரும் நபர்கள் தொடர்பில் கண்டறியும் நடவடிக்கைகள் தொடர்பில் திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிபிப்பின் கீழ், திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தினால் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவர்கள் கடல் வழியாக நியூஸிலாந்து செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment