மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான அறிவித்தல் - News View

Breaking

Tuesday, October 12, 2021

மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான அறிவித்தல்

மேல் மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திரம் இன்று முதல் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே விநியோகிக்கப்படும் என மேல் மாகாண தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.

அதன்படி, வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி அமைப்பு செயலிழந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், மேல் மாகாணத்தில் ஓகஸ்ட் 12, 2021 ஆம் திகதி முதல் டிசம்பர் 31, 2021 ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதம் விதிக்காது சலுகைக் காலத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment