இலங்கைக்குள் கொரோனாவின் புதிய வகைகள் நுழையும் அபாயம் - News View

Breaking

Monday, October 18, 2021

இலங்கைக்குள் கொரோனாவின் புதிய வகைகள் நுழையும் அபாயம்

கொரோனாவின் புதிய வகைகள் நாட்டுக்குள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்படுவதாலும் துறைமுகங்கள் மீண்டும் செயல்படுவதாலும், புதிய வகை கொரோனா நாட்டிற்குள் நுழையும் அபாயம் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த காலகட்டத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ள சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைபிடிக்குமாறு பொது மக்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment