லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நேர அட்டவணை வெளியீடு - News View

Breaking

Wednesday, October 13, 2021

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நேர அட்டவணை வெளியீடு

2021 லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் இரண்டாவது பருவம் எதிர்வரும் டிசம்பர் 05ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

முதல் போட்டி, காலி மற்றும் யாழ்ப்பாண (கடந்த தொடரின் வெற்றியாளர்) அணிகளுக்கிடையே, கொழும்பு ஆர். பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மாலை 07.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.

தொடரின் 20 போட்டிகளைக் கொண்ட முதல் சுற்று போட்டிகள் ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து இறுதிச் சுற்று போட்டிகள் அனைத்தும் அம்பாந்தோட்டையில் டிசம்பர் 20ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளது.

இறுதிப் போட்டி டிசம்பர் 23 ஆம் திகதி அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் இடம்பெறவுள்ள அதே நேரத்தில் டிசம்பர் 24 ஆம் திகதி, இறுதிப் போட்டிக்கான மேலதிக நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் 2021 ஆனது, சிறந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பங்குபற்றுதலுடன், இலங்கையின் முன்னணி உள்நாட்டு கிரிக்கெட் தொடராகும். இம்முறை இறுதிப் போட்டி உள்ளிட்ட 24 போட்டிகளை இது கொண்டுள்ளது.

இறுதி சுற்று போட்டிகள், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள், தகுதி 1 (qualifier 1) போட்டியில் விளையாடும் என்பதுடன், ​​3ஆவது மற்றும் 4ஆவது இடத்தில் உள்ள அணிகள் ‘நீக்கப்படல்’ (eliminator) போட்டியில் விளையாடும்.

'qualifier 1' இல் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குச் செல்லும் அதே சமயம் 'qualifier 1' இல் தோல்வியடையும் அணி 'eliminator' போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் 'qualifier 2' போட்டியில் விளையாடி, அதில் வெற்றி பெறுவதன் மூலம் இறுதிப் போட்டிக்கு செல்லும்.

போட்டி அட்டவணை வருமாறு
RPICS = ஆர். பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானம், கொழும்பு

MRICS = மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம், அம்பாந்தோட்டை

No comments:

Post a Comment