மீலாத் கவியரங்கம் - News View

Breaking

Monday, October 18, 2021

மீலாத் கவியரங்கம்

ரஜரட்ட எடு நெட்வேர்க் அமைப்பினர் நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்புக் கவியரங்கம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார்கள். 

"யாவரும் விரும்பும் யா நபி" என்ற மகுடத்தின் கீழ் சந்தக்கவி கிண்ணியா அமீர் அலியின் தலைமையில் இக்கவியரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கவியரங்கில் கவிஞர் நாச்சியாதீவு பர்வீன், எம்.எஸ்.அப்துல் லத்தீப், கிராமத்தான் கலீபா, கல்முனை அறூபா அஹ்லா, அநுராதபுரம் சீமா ஷைரீன் ஆகியோர் கவிதை பாட உள்ளனர். 

ரஜரட்ட எடு நெட்வேர்க் அமைப்பினர் இந்த அசாதாரணமான கொவிட் தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு கொவிட் தொடர்பிலான விளிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்கும், கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களை மனதளவில் தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலும் பல்வேறு நேரலை நிகழ்சிகளை ஒழுங்கு செய்து வெற்றிகரமாக நடாத்தி முடித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment