பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பசறை பிரதேச சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் - News View

Breaking

Thursday, October 21, 2021

பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பசறை பிரதேச சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பசறை பிரதேச சபைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விலையை குறைக்குமாறு கோரி எரிவாயு சிலிண்டருக்கு மேலே ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் 6 பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment