அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்துடன் அரசாங்கம் மின்சாரத்துறை சார்ந்த ஒப்பந்தம் ஒன்றை இரகசியமான முறையில் கைச்சாத்திட தீர்மானித்துள்ளது என மின்சார சபை சேவையாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் விஜயலால் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் வளங்களை நள்ளிரவில் அந்நியர்களுக்கு வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
யுகதனவி விவகாரத்தில் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று குறிப்பிடும் அரசாங்கம் இதுவரையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் முழு வரைபையும் வெளிப்படுத்தவில்லை.
அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்தினத்துடன் மின்சாரத்துறை தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக அந்நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
யுகதனவி மின் நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் வகையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை தடை நீக்குமாறு பல்வேறுக்கட்ட முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம்.
எமது முயற்சி தோல்வியடைந்தால் நிச்சயம் துறைமுகம், கனிய வளம் மற்றும் மின்சாரத்துறை ஆகிய பிரதான துறைகளை ஒன்றினைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம் என்றார்.
No comments:
Post a Comment