மெடா என்ற சொல் ஹீப்ரூ மொழியில் தரும் விபரீத பொருள் : கேலிக்குள்ளாகும் ஃபேஸ்புக் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 30, 2021

மெடா என்ற சொல் ஹீப்ரூ மொழியில் தரும் விபரீத பொருள் : கேலிக்குள்ளாகும் ஃபேஸ்புக்

சில நாட்களுக்கு முன்புதான் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை நடத்தும் நிறுவனம் தன் பெயரை 'மெடா' என்று மாற்றிக் கொண்டது.

ஹீப்ரூ மொழியில் 'மெடா' என்றால் இறப்பு என்று பொருள் வருவதால் அதை வைத்து ஃபேஸ்புக் நிறுவனம் சமூக வலைத்தளத்தில் கேலிக்குள்ளாகிறது.

ஃபேஸ்புக் இறந்து விட்டது என்று பொருள் தரும் வகையில் #FacebookDead என்கிற ஹேஷ் டேகின் கீழ் பலரும் ட்விட்டர் தளத்தில், பலரும் எழுதுகிறார்கள்.

ஒரு ட்விட்டர் பயனர் "ஹீப்ரூ பேசும் மக்கள் அனைவரும் சிரிக்க ஒரு நல்ல காரணத்தை கொடுத்தமைக்கு நன்றி" என கூறினார்.

ஃபேஸ்புக் மட்டுமே இப்படி பெயர் மாற்ற மொழி பெயர்ப்பு பிரச்சனையால் அனைவரும் பார்த்து சிரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட நிறுவனமல்ல.

மொழிபெயர்ப்பின் போது பொருள் மாறிய சில எடுத்துக் காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் விரல்களை வெட்டி சாப்பிடுங்கள்
அமெரிக்காவைச் சேர்ந்த கே எஃப் சி துரித உணவகத்துக்கு 'விரல்களை நக்கி சாப்பிடும் அளவுக்கு சிறப்பானது' என்பதுதான் அவர்களின் இலக்கு வாக்கியம். அந்நிறுவனம் சீனாவுக்கு 1980 களில் நுழைந்த போது, தங்களின் இலக்கு வாக்கியத்தை சீனாவில் மொழி பெயர்த்த போது அத்தனை சிறப்பாக பொருந்திப் போகவில்லை.

மாண்டரின் மொழியில் "உங்கள் விரல்களை வெட்டி சாப்பிடுங்கள்" என்று பொருள்படும் வகையில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

ஆனால் அந்த வாசகங்கள் கே எஃப் சி நிறுவனத்தை அதிகம் பாதிக்கவில்லை. இப்போதும் சீனாவின் மிகப்பெரிய துரித உணவகங்களில் ஒன்றாக உள்ளது கே எஃப் சி.

உலகின் முன்னணி சொகுசு கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், தன் 'சில்வர் மிஸ்ட்' காரின் பெயரை 'மிஸ்ட்' என மாற்றியது. அதை ஜெர்மனில் மொழி பெயர்த்தால் 'சாணம்' அல்லது 'மலம்' என பொருள்பட்டது. பிறகு காருக்கு சில்வர் ஷேடோவ் என்று பெயர் மாற்றப்பட்டது.

நொக்கியா நிறுவனம் கடந்த 2011ம் ஆண்டு லூமியா மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியபோது, அது எதிர்பார்த்த அளவுக்கு எதிர்வினைகள் வரவில்லை.

ஸ்பானிய மொழியில் லூமியா என்றால் 'விபச்சாரம் செய்பவர்' என்று பொருள். நாடோடியாக வாழும் மக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் மொழி வழக்குகளில் மட்டுமே இப்படி பொருள்படும்.

ஹோண்டா நிறுவனம் தன் புதிய கார் ஒன்றுக்கு ஃபிட்டா என்று பெயரிட இருந்தது. ஸ்வீடிஷ் மொழியில் ஃபிட்டா என்றால் யோனிக் குழலை குறிக்கும் கொச்சையான சொல்.

இந்த பிரச்சனை தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த ரக வாகனத்துக்கு ஜாஸ் என பல நாடுகளில் பெயரிடப்பட்டது.

No comments:

Post a Comment