அனைத்து பாடசாலைகளும் வெகுவிரைவில் திறக்கப்படும் : திங்கட்கிழமை அதிபர், ஆசிரியர்கள் அனைவரும் கடைமைக்கு சமுகமளிப்பர் - கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன - News View

Breaking

Thursday, October 21, 2021

அனைத்து பாடசாலைகளும் வெகுவிரைவில் திறக்கப்படும் : திங்கட்கிழமை அதிபர், ஆசிரியர்கள் அனைவரும் கடைமைக்கு சமுகமளிப்பர் - கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன

(இராஜதுரை ஹஷான்)

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய அனைத்து பாடசாலைகளும் வெகுவிரைவில் திறக்கப்படும் பாடசாலை கல்வி செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல கல்வி அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்படும். எதிர்வரும் திங்கட்கிழமை அதிபர், ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைக்கு சமுகமளிப்பார்கள் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய பாடசாலைகளை முதற்கட்டமாக திறப்பதற்கும், பாடசாலை கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கிய மாகாண ஆளுநர்கள், கல்வி பணிப்பாளர்கள், கல்வி சேவை அதிகாரிகள், சுகாதார தரப்பினர் , கிராம சேவகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல கல்வி அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்படும்.எதிர்வரும் 25 ஆம் திகதி அனைத்து ஆசிரியர், அதிபர்களும் பாடசாலைக்கு சமுகமளிப்பார்கள் என்றார்.

No comments:

Post a Comment