ரயில் சேவையில் ஆண்டுக்கு ஒரு பில்லியன் ரூபா நஷ்டம் : மாற்றங்களை ஏற்படுத்த திட்டம் - அமைச்சர் திலும் அமுனுகம - News View

About Us

About Us

Breaking

Sunday, October 3, 2021

ரயில் சேவையில் ஆண்டுக்கு ஒரு பில்லியன் ரூபா நஷ்டம் : மாற்றங்களை ஏற்படுத்த திட்டம் - அமைச்சர் திலும் அமுனுகம

ரயில் சேவை ஆண்டு தோறும் சுமார் 1 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கிறது. ரயில் சேவையை பராமரிக்க ஆண்டுதோறும் 1.8 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது, ஆனால் வருமானமாக 800 மில்லியன் ரூபாவே கிடைக்கப் பெறுகிறது என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 

கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தில் ரயில் சேவையில் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சின் ஆலோசனையின் கீழ் பல மாற்றங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் பொருட்கள் ரயில் சேவையை மேம்படுத்தவும், தற்போதுள்ள ரயில் சாலை அமைப்பு பொருத்தமான திட்டத்தில் இல்லாததால் அதிக கனமான பெட்டிகளை கொண்டு செல்லும் வகையில் ரயில் தண்டவாளங்களை சீரமைக்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு புதிய சொகுசு ரயில்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று கண்டி-கொழும்பு வழித்தடத்தில் சேர்க்கப்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment