(இராஜதுரை ஹஷான்)
தவறுகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு எமக்குண்டு. அரசாங்கம் ஒருபுறமும், நாட்டு மக்கள் மறுபுறமும் சென்றால் பெரும் விளைவுகள் ஏற்படும். வலு சக்தி துறையின் அதிகாரங்கள் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமானால் நாட்டின் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
புறக்கோட்டையில் உள்ள சொலிஸ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற 'மக்கள் பேரவை' மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக அரசுகளின் இருப்பை தீர்மானிக்கும் பிரதான சக்தியாக வலு சக்தி காணப்படுகிறது. நாட்டின் வலு சக்தி தொடர்பிலான அதிகாரங்கள் அனைத்தும் அமெரிக்காவின் தனித்த ஒரு நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் பாரதூரமனது.
தேசிய பொருளாதாரம், இறையாண்மையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தோம். வலு சக்தி துறையின் அதியுச்ச அதிகாரங்களை பிற நாடுகளுக்கு வழங்கினால் எமது நாட்டின் இறையாண்மை கேள்விக்குறியாக்கும். புதுப்பிக்கத்தக்க வளங்கள் தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
தவறுகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு எமக்குண்டு.அரசாங்கம் ஒருபுறமும், நாட்டு மக்கள் மறுபுறமும் சென்றால் பெரும் விளைவுகள் ஏற்படும். விளைவுகளை தடுத்துக் கொள்வதற்காகவே மக்கள் மத்தியில் முறைப்பாடளிக்க தீர்மானித்துள்ளோம்.
அரசாங்கத்தை வீழ்த்துவதும், நெருக்கடிக்குள்ளாக்குவதும் எமது நோக்கமல்ல, தவறுகளை திருத்திக் கொண்டு நாட்டின் இறையான்மையை பாதுகாக்கவே முயற்சிக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment