எரிபொருள் விலை எவ்வாறு எப்போது அதிகரிக்கும் என்பது தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சு - அமைச்சர் பந்துல - News View

Breaking

Tuesday, October 12, 2021

எரிபொருள் விலை எவ்வாறு எப்போது அதிகரிக்கும் என்பது தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சு - அமைச்சர் பந்துல

(எம்.மனோசித்ரா)

உலக சந்தையில் அதிக விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்து, உள்நாட்டில் குறைந்த விலையில் அதனை விநியோகிப்பதற்கான முறைமை இல்லை. எனவே எரிபொருள் விலை எவ்வாறு எப்போது அதிகரிக்கும் என்பது தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பொருட்களை உலக சந்தை விலைக்கு ஏற்ப கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. எரிபொருள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால் உலக சந்தையில் அதன் விலை உயரும்போது உள்நாட்டிலும் விலை அதிகரிப்பு ஏற்படும்.

அதேபோன்று எரிவாயு, பால்மா, பருப்பு உள்ளிட்டவற்றின் விலைகளும் அதிகரிக்கும். கொவிட் தொற்றின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

முழு உலகும் எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியிலிருந்து ஒரு தீவான எம்மால் மாத்திரம் தப்பிக்க முடியாது. எனவே விருப்பமின்றியே பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன.

உலக சந்தையில் அதிக விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்து, உள்நாட்டில் குறைந்த விலையில் அதனை விநியோகிப்பதற்கான முறைமை இல்லை.

எனவே எரிபொருள் விலை அதிகரிக்கப்படும். அது எவ்வாறு எப்போது அதிகரிக்கும் என்பது தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment