இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Friday, October 8, 2021

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் (டெஸ்ட்) பந்துல வர்ணபுர கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு, தற்சமயம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வர்ணபுர திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மூன்று நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் சனத் ஜெயசூர்யா வர்ணபுரவின் நல்வாழ்வு மற்றும் குணமடைவதற்காக பிரார்த்திக்குமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறுதியாக ஒரு முழுமையான டெஸ்ட் விளையாடும் நாடாக மாறியபோது இலங்கை அணியை வழிநடத்தும் கெளரவம் அவருக்கு கிடைத்தது.

No comments:

Post a Comment