ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம் - ரமேஷ் பத்திரண - News View

Breaking

Wednesday, October 6, 2021

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம் - ரமேஷ் பத்திரண

(எம்.மனோசித்ரா)

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

எவ்வித இன, மத, பேதமும் இன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் நட்புறவுடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்கியுள்ளமை தொடர்பில் சிறந்த அனுபவத்தையும் தெளிவினையும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு பெற்றிருக்கும்.எனவே ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை பாதுகாக்க முடியும்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்ற போது, 'ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நீக்கி இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு' தொடர்பில் கேட்கப்பட்ட போது இவ்வாறு அவர் பதிலளித்தார்.

No comments:

Post a Comment