எரிபொருள் கொள்வனவிற்கே இந்தியாவுடன் கடன்பெற பேச்சு, வேறு எந்த முன் நிபந்தனையும் இல்லை என்கிறார் டலஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 19, 2021

எரிபொருள் கொள்வனவிற்கே இந்தியாவுடன் கடன்பெற பேச்சு, வேறு எந்த முன் நிபந்தனையும் இல்லை என்கிறார் டலஸ்

அரசியலமைப்பின் 13 வது திருத்தம் இந்தியாவிலிருந்து கடன் பெறுவதற்கான முன்நிபந்தனை அல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது.


எரிபொருள் வாங்குவதற்காக கடன் பெற இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இருப்பினும் இந்த விடயத்திற்கு அரசியலமைப்பின் 13 வது திருத்தம் ஒரு முன்நிபந்தனையாக வைக்கப்படவில்லை என்றும் கூறினார். 

அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்த இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவிற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியாவிடம் கோரியுள்ளது. 

நாட்டில் தற்போது உள்ள எரிபொருள் அடுத்த ஜனவரி வரை மட்டுமே போதுமானதாக உள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment