07 கோடி ரூபா தங்கம் கடத்தல் முறியடிப்பு : கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் கைது - News View

Breaking

Tuesday, October 19, 2021

07 கோடி ரூபா தங்கம் கடத்தல் முறியடிப்பு : கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் கைது

சுமார் 07 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடத்த முற்பட்ட நபர் ஒருவரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பிரிவில் பணிபுரியும் 25 வயதுடையவர் என்றும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் அதிகாலை 2 மணியளவில் அந்த நபரை கைது செய்ததாகவும் நபரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டபோது அவர் தம் உடையில் மறைத்து வைத்திருந்த 4,848 கிராம் எடையுடைய 48 தங்க பிஸ்கட்டுகளை கைப்பற்றியுள்ளதாகவும் அதன் சந்தைப் பெறுமதி சுமார் 07 கோடி ரூபா என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள தங்கம் அரசுடமையாக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment