பாராளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினருக்கு தொலைபேசி அழைப்பு : விசாரணை மேற்கொள்ளுமாறு சமிந்த விஜேசிறி சபாநாயகரிடம் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, October 22, 2021

பாராளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினருக்கு தொலைபேசி அழைப்பு : விசாரணை மேற்கொள்ளுமாறு சமிந்த விஜேசிறி சபாநாயகரிடம் கோரிக்கை

(ஆர்.யசி , எம்.ஆர்.எம்.வசீம் )

பண்டோரா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த மோசடி தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசியதை அடிப்படையாகக் கொண்டு திரு நடேசன் என்ற பெயரில் எனக்கு வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) சிறப்புரிமை கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நான் கடந்த 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் எனக்கு 0767204126 என்ற இலக்கத்தில் இருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அதில் நான் திரு நடேசன். நீங்கள் சமிந்த விஜேசிறியா என கேட்கப்பட்டது. நான் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை பாராட்டி சிரித்த முகத்துடன் தெரிவித்து அழைப்பை துண்டித்தார்.

அவர் தொலைபேசி அழைப்பை சிரித்த முகத்துடன் துண்டித்தன் மூலம் ஏதாே ஒருவகையில் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டேன். ஏனெனில் பாராளுமன்ற உரையில் நிதி மோசடி தொடர்பாகவே பேசி இருந்தேன். அதனால் மாதிவல பொலிஸுக்கு அறிவித்து, மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்தேன். ஆனால் பொலிஸார் இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.

அதேபோன்று கடந்த 14ஆம் திகதி 0444425699 என்ற இலக்கத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான பிரதமரின் செயலாளருமான உதித் லாெக்கு பண்டார என்க்கு அழைப்பு விடுத்து கேட்டார், திருநடேசன் கதைத்தாரா என கேட்டார்.

அதற்கு நான், திருநடேசன் என ஒருவர் கதைத்தார். யார் என எனக்கு தெரியாது. அவரின் பேச்சு எனக்கு அச்சுறுத்தல் போன்று இருந்தமையால் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கின்றேன் என்றேன்.

எனக்கு அழைப்பு விடுத்தது யார் என்பது தொடர்பில் பொலிஸார் தேடிப்பாத்து தெரிவிக்கவில்லை. ஆனால் என்னுடன் கதைத்தது திருநடேசன் என்பதை பிரதமரின் பாராளுமன்ற விவகார செயலாளர் உதித் லாெக்கு பண்டார உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

எனவே நாட்டின் மோசடி தொடர்பாக பாராளுமன்றத்தில் கதைக்கும் எமக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஏற்படுத்திய தொலபேசி அழைப்பு தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment