காதி நீதிமன்ற கட்டமைப்பை இல்லாமல் செய்யக் கூடாது : அரச ஆதரவு எம்.பி.க்களின் நிலைப்பாட்டை கூறுகிறார் நஷீர் அஹமட் - News View

Breaking

Saturday, October 2, 2021

காதி நீதிமன்ற கட்டமைப்பை இல்லாமல் செய்யக் கூடாது : அரச ஆதரவு எம்.பி.க்களின் நிலைப்பாட்டை கூறுகிறார் நஷீர் அஹமட்

நாட்டில் அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­ வேண்­டு­மே­யன்றி காதி நீதி­மன்ற கட்­ட­மைப்பு இல்­லாமற் செய்­யப்­ப­டக்­கூ­டாது என்­பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீமின் நிலைப்­பாட்­டிலே 20 ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ரவு வழங்­கிய உறுப்­பி­னர்­களும் இருக்­கிறோம். இது தொடர்பில் கட்­சியின் தலை­வ­ரு­டனும் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்­டி­ருக்­கின்றோம். என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நஸீர் அஹமட் தெரி­வித்தார்.

அவர் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் மற்றும் காதி ­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பு தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் “காதி ­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பில் குறை­பா­டுகள் இருக்­கின்­றன. சில காதி நீதி­ப­திகள் விமர்­ச­னங்­களுக் குள்­ளா­கி­யி­ருக்­கி­றார்கள். சிலர் தகு­தி­யற்­ற­வர்­க­ளாக இருக்­கி­றார்கள் என்­ப­தற்­காக காதி நீதி­மன்ற கட்­ட­மைப்­பையே இல்­லாமற் செய்­வது பொருத்­த­மற்­றது.

அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னத்­தின்­படி முஸ்­லிம்­களின் திரு­மண பிணக்­குகள் மாவட்ட நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­பட்டால் அதனால் முஸ்லிம் பெண்கள் பெரிதும் பாதிக்­கப்­ப­டுவர்.

மாவட்ட நீதி­மன்றில் தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு பல வரு­டங்கள் செல்­லலாம் என்­பதால் அது பிரச்­சி­னைக்­கு­ரி­ய­தாக இருக்கும்.

கடந்த காலங்­களில் அதி­காரம் எங்கள் கையில் இருந்­த­போது முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை நாம் மேற்­கொள்­ள­வில்லை. திருத்­தங்கள் தொடர்பில் பேசி பேசியே இருந்தோம். தற்­போது அதி­காரம் எங்­க­ளிடம் இல்­லா­த­போது இது பற்றி விமர்­சித்­துக்­ கொண்­டி­ருக்­கின்றோம். இதுவே எமது இன்­றைய நிலைமை. எம்­மிடம் அதி­காரம் இருந்­த­போது இல­கு­வாக தீர்­வு­களைப் பெற்றுக் கொண்­டி­ருக்­கலாம்.

காதி­ நீ­தி­மன்ற கட்­ட­மைப்பை இல்­லா­தொ­ழிக்­காது அம்­மு­றை­மையை மேம்­ப­டுத்­த­ வேண்டும், குறை­களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்­பது பற்றி நீதி­ய­மைச்சர் மற்றும் ஏனைய அமைச்­சர்­க­ளு­டனும் தொடர்ந்து கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு வரு­கிறோம். எமது முயற்­சிகள் நிச்­சயம் வெற்­றி­ய­ளிக்கும் என்ற நம்­பிக்­கை­யுண்டு.

சில காதி நீதி­ப­திகள் தங்­க­ளது கட­மை­யினை முறை­யாக நிறை­வேற்­றா­மை­யி­னாலே தற்­போது காதி ­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பின் மீது பாரிய குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. சிலர் உரிய காரணங்களின்றி விவாகரத்து பெற்று செல்கின்றனர். பிள்ளைகளுக்கு நியாயமான தாபரிப்பு கூட உத்தரவிடப்படுவதில்லை. இந்நிலைமை மாறவேண்டும். எனவே காதி நீதிபதிகள் பொறுப்புடன் தமது கடமைகளை நிறைவேற்றவேண்டியது அவசியமாகும் என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment