யாழ். இராசாவின் தோட்ட வீதி மூடப்படுகிறது! - News View

Breaking

Tuesday, October 5, 2021

யாழ். இராசாவின் தோட்ட வீதி மூடப்படுகிறது!

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதி எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் இராசாவின் வீதி - ஸ்ரான்லி வீதி சந்திக்கு அருகில், இராசாவின் வீதியின் குறுக்காக வடிகால் கட்டமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையால், குறித்த வீதியின் ஊடான போக்கு வரத்து நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரையில் தடைப்பட்டு இருக்கும்.

அதனால் மாற்று வீதிகளின் ஊடாக போக்கு வரத்தினை மேற்கொள்ளுமாறும், அதனால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment