நாடு திரும்பினார் யோஹானி டி சில்வா : விமான நிலையத்தில் அமோக வரவேற்பு! - News View

Breaking

Wednesday, October 13, 2021

நாடு திரும்பினார் யோஹானி டி சில்வா : விமான நிலையத்தில் அமோக வரவேற்பு!

சுமார் இரண்டு வார காலப்பகுதியில் இந்தியாவில் நடந்த பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட யோஹானி டி சில்வா நாடு திரும்பியுள்ளார்.

அவர் நேற்று இரவு (12) 11.25 மணிக்கு மும்பையிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இலங்கை வந்தடைந்த அவருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை இராணுவம் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் அவருக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்கியிருந்தது.

இந்திய விஜயம் குறித்து விமான நிலையத்தில் கருத்து தெரிவித்த அவர், இந்திய மக்கள் இலங்கையை பற்றி அறிந்திருந்தாலும், சிங்கள மொழி இருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் கேட்காத மொழியில் நான் ஒரு பாடலைப் பாடினேன், அது இந்தியாவிலும் உலகெங்கிலும் மிகவும் பிரபலமாக இருந்தது என்று கூறினார்.

No comments:

Post a Comment