இலங்கை வந்த ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா திருகோணமலை எண்ணெய் குதங்களை பார்வையிட்டார் : தலதா மாளிகையில் வழிபாடுகளுடன் விஜயம் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 3, 2021

இலங்கை வந்த ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா திருகோணமலை எண்ணெய் குதங்களை பார்வையிட்டார் : தலதா மாளிகையில் வழிபாடுகளுடன் விஜயம் ஆரம்பம்

இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்றையதினம் (03) திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி தொகுதிகளை பார்வையிட்டார்.

இந்த எண்ணெய் தாங்கிகளின் (Lower Tank Farms) தற்போதைய அபிவிருத்திகள் மற்றும் இலங்கையின் வலு சக்தி துறைப்பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக இந்திய - இலங்கை பங்குடைமையை மேலும் வலுவாக்குவதற்கான சாத்தியங்கள் குறித்தும் LIOC அதிகாரிகளால் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக, இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

LIOC நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'Servo Pride ALT 15W-40'இனை இந்த விஜயத்தின்போது அறிமுகம் செய்து வைப்பதற்காக LIOC நிறுவனத்துடன் இணைந்து கொண்டமை குறித்து வெளியுறவு செயலர் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.

4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நேற்றையதினம் (02) இலங்கை வந்தடைந்தார்.

இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் இலங்கை வெளிவிவகார செயலாளர் ஓய்வு பெற்ற அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் வெளியுறவுச் செயலாளரை விமான நிலையத்தில் வரவேற்றிருந்தனர்.

இன்றையதினம் (03) வெளியுறவு செயலாளர், ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாட்டினை மேற்கொண்டு ஆசிபெற்று தனது விஜயத்தினை ஆரம்பித்ததோடு, இதன்போது தலதா மாளிகையின் தியவடன நிலமேயினால் வெளியுறவு செயலருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த பிணைப்பினை வலுவாக்கும் வகையிலும், இந்திய - இலங்கை மக்களின் நலன் மற்றும் செழுமைக்காகவும், வெளியுறவுச் செயலாளர் வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததாக தூதகரம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment