கைத்தொலைபேசி வெடித்ததில் மாணவன் பலி - News View

Breaking

Monday, October 18, 2021

கைத்தொலைபேசி வெடித்ததில் மாணவன் பலி

இந்தியாவில் கோவை அருகே கைத்தொலைபேசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கோவை மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மாணவன் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இவர், கடந்த 9 ஆம் திகதி இரவு வழக்கம்போல வீட்டில் தனது அறையில் படுக்கையில் இருந்தவாறு கைத்தொலைபேசி உபயோகித்துள்ளார். பின்னர் கைத்தொலைபேசியை சார்ஜ் போட்டு விட்டு நித்திரரைக்கு சென்றுவிட்டார்.

மறுநாள் அதிகாலை மின் இணைப்பில் இருந்த கைத்தொலைபேசி வெடித்துள்ளது. அப்போது ஏற்பட்ட தீ, மாணவனின் படுக்கையில் பரவி, அவர் மீதும் பற்றியது. இதில் உடலில் பல்வேறு பகுதிகளில் அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாணவன் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment