அரிசியின் விலைகள் அதிகரிக்கும் - கட்டுப்பாட்டு விலையை விரைவாக அறிவிக்கவும் - News View

About Us

About Us

Breaking

Monday, October 18, 2021

அரிசியின் விலைகள் அதிகரிக்கும் - கட்டுப்பாட்டு விலையை விரைவாக அறிவிக்கவும்

(இராஜதுரை ஹஷான்)

எதிர்வரும் தினங்களில் அனைத்து ரக அரசியின் விற்பனை விலைகளும் 25 ரூபா தொடக்கம் 50 வரை அதிகரிக்க கூடும். அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் விரைவாக அறிவிக்க வேண்டும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜயவிக்ரம தெரிவித்தார்.

உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதால் எதிர்வரும் தினங்களில் அரசிக்கான கேள்வி அதிகரிக்கும். ஆகவே அரிசியின் விற்பனை விலையை அதிகரிக்க நேரிடும். அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை விரைவாக அறிவிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

உரப் பிரச்சினை தற்போது தீவிரமடைந்துள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் எதிர்வரும் ஜனவரி மாத்திற்குள் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும். உரப் பிரச்சினையின் காரணமாக பெரும்போகத்தில் 50 சதவீதமான நெல் விளைச்சல் மட்டுமே கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment