வைரஸ் தொற்றாளர்களில் 80 வீதமானோருக்கு எந்தவித அறிகுறியும் வெளிப்படுத்தாது : பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - News View

Breaking

Friday, October 1, 2021

வைரஸ் தொற்றாளர்களில் 80 வீதமானோருக்கு எந்தவித அறிகுறியும் வெளிப்படுத்தாது : பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

(ஆர்.யசி)

எந்தவித அறிகுறியும் வெளிப்படுத்தாது, கொவிட் தொற்றாளர்கள் என்ற அடையாளம் தெரியாத வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர். ஆகவே நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார வழிமுறைகளை மீறி செயற்படும் பட்சத்தில் மீண்டும் கொவிட் வைரஸ் தாக்கங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் தொற்றாளர்களில் 80 வீதமானோருக்கு எந்தவித அறிகுறியும் வெளிப்படுத்தாது என்பதை கவனத்தில் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் வைரஸ் தொற்றைப் பொறுத்த வரையில் 80 வீதமானோருக்கு எந்தவித வைரஸ் தொற்றுக்கான அறிகுறியும் வெளிப்படுத்தாது. ஆகவே எந்தவித மருத்துவ சிகிச்சைகளும் பெற்றுக் கொள்ளாது சாதாரணமாக அவர்கள் சமூகத்தில் நடமாடும் நிலையே உள்ளது. எனவே வைரஸை காவிச் செல்லும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டு மீண்டும் நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் அவதானிக்கப்பட வேண்டிய காரணிகள் குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை கூறினார்.

No comments:

Post a Comment