அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாடு செல்லத் தடை : ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, October 18, 2021

அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாடு செல்லத் தடை : ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை

அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பேராசிரியர் பீ.பி. ஜயசுந்தர அனுப்பியுள்ளார்.

அரச வட்டாரங்களின் தகவலின்படி, வரவு செலவுத் திட்டத்தை வெற்றி கொள்வதற்காக அனைத்து தரப்பினரும் முடிந்தவரை பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் ஜனாதிபதியின் செயலாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். 

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவால் அடுத்த மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment