6ஆம் திகதி தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனம் - இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 5, 2021

6ஆம் திகதி தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனம் - இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

இலங்கையில் ஆசிரியர் தினம் எதிர்வரும் ஐப்பசி மாதம் ஆறாம் திகதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றோம் என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்தார்.

இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் (GTSL) வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் நேற்று திங்கட்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இருளை நீக்கும் தலைமுறையை இருளில் தள்ளுவதற்கு எதிராக எதிர்வரும் 6 ஆம் திகதி பாடசாலைகள், ஆசிரியர் இல்லங்கள் மற்றும் ஏனைய இல்லங்கள் தோறும் கறுப்புக் கொடியை ஏற்றி ஆசிரியர் தினம் 'தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக' அனுஸ்டிக்கப்படும்.

அத்துடன் ஆசிரியர் தினத்தன்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சிகளின் தலைமையையும் ஒருமித்து சந்தித்து அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு பற்றி கலந்தாலோசித்து அது தொடர்பான விரைவான தீர்விற்கு செல்வதாகவும் என ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு எதிரான தேசிய ஒற்றுமை அமைப்பு தீர்மானித்துள்ளது.

எனவே எமது நிலையை வெளிப்படுத்த இலங்கையில் ஆசிரியர் தினமான 6 ஆம் திகதியான அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment