இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 608,000 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இன்று (18) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதற்கமைய, இலங்கையினால் கொள்வனவுக்காக கோரப்பட்ட Pfizer தடுப்பூசி டோஸ்களில் இதுவரை 1.7 மில்லியன் டோஸ்கள் இதுவரை வந்தடைந்துள்ளதாக, இலங்கை ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் பொது முகாமையாளர் தினூஷ தசநாயக்க தெரிவித்தார்.
இன்று (18) அதிகாலை வந்தடைந்த தடுப்பூசி தொகையானது, 53 பெட்டிகளில் பொதி செய்யப்பட்ட, 1,817.8 கி.கி. எடை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment