ஸ்பெயினில் 600 வீடுகளை தீக்கிரையாக்கிய எரிமலைக் குழம்பு : 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம் : 58 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பரவியது - News View

About Us

About Us

Breaking

Friday, October 1, 2021

ஸ்பெயினில் 600 வீடுகளை தீக்கிரையாக்கிய எரிமலைக் குழம்பு : 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம் : 58 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பரவியது

ஸ்பெயினில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் வெளியேறிய எரிமலை குழம்பு 9 நாட்களின் பின்னர் கடலில் கலந்துள்ளது.

ஸ்பெயினில் கனரி தீவுக்கூட்டங்களில் ஒன்றான லா பல்மா என்ற தீவில் உள்ள ஹம்ரி விஜா என்ற எரிமலையில் கடந்த 19 ஆம் திகதி திடீரென சீற்றம் ஏற்பட்டது.

கரும்புகையுடன் எரிமலை வெடித்து சிதறி எரிமலை குழம்பு வெளியேறத் தொடங்கியது.

எரிமலை குழம்பு மக்கள் வசித்து வந்த குடியிருப்பு பகுதிகளையும் எட்டியது. இதனால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

எரிமலை சீற்றம் தொடர்ந்து நீடித்து வருவதாலும், எரிமலை குழம்பு தொடர்ந்து வெளியேறி வருவதாலும் அப்பகுதியில் இராணுவம் மற்றும் மீட்புப்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எரிமலை சீற்றம் ஏற்பட்ட பகுதியில் இருந்து இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஹம்ரி விஜா எரிமலை குழம்பு வெளியேறி வந்த பாதையில் இருந்த சுமார் 600 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. மேலும், எரிமலை குழம்பு 258 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பரவியுள்ளது.

இந்நிலையில், மலையில் இருந்து வழிந்தோடிய எரிமலை குழம்பு 9 நாட்களுக்கு பின்னர் நேற்று கடலில் கலந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை எழுந்தது.

No comments:

Post a Comment