பப்படத்தை சாப்பிட்ட 5 வயது மகளுக்கு வாயில் சூடு வைத்த தாய் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, October 9, 2021

பப்படத்தை சாப்பிட்ட 5 வயது மகளுக்கு வாயில் சூடு வைத்த தாய் கைது

அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் விநாயகர் குடியிருப்பு பகுதியில் நேற்றையதினம் அருகில் உள்ள கடைக்குச் சென்று பப்படம் வாங்கி வருமாறு தாயார் தனது 5 வயது மகளுக்கு கூறியுள்ளார்.

எனவே 5 வயது சிறுமி பப்படத்தை வாங்கிக் கொண்டு வரும் வழியில் ஒரு பப்படத்தை பச்சையாக சாப்பிட்டு விட்டார். இதனால் கோபமுற்ற தாய் தனது மகளுக்கு தீயினால் சூடு வைத்துள்ளார்.

சம்பவத்தை அவதானித்த சிறுமியின் தாத்தா அக்கராயன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த தாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தை தொழிலுக்குச் சென்ற வேளையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, தாயாரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment