க.பொ.த. உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடக்காது - திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 7, 2021

க.பொ.த. உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடக்காது - திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும்

க.பொ.த. உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை திட்டமிட்ட திகதிகளில் நடாத்த முடியாமல் பிற்போட வேண்டிள்ளதாக, கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்றையதினம் (07) பாராளுமன்றில் அவர் தெரிவித்ததோடு, பரீட்சைத் திகதிகள் விரைவில் அறிவிக்கப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

வருடாந்தம் ஓகஸ்ட் மாதத்தில் தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறும்.

ஆயினும் கொவிட்-19 தொற்று காரணமாக பாடசாலைகள் முடக்கப்பட்டிருந்தமை மற்றும் அதிபர், ஆசிரியர்கள் ஒன்லைன் கற்பித்தலிலிருந்து விலகி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை காரணமாக அப்பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

அதன் அடிப்படையில், முன்னாள் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய, 2021 க.பொ.த உயர்தர பரீட்சைகள் நவம்பர் 15 - டிசம்பர் 10 வரையும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 14 இலும் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.

அதற்கு முன்னர் 2021 க.பொ.த. உயர்தரப் பரீட்சை: ஒக்டோபர் 04 - 30, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை: ஒக்டோபர் 03 இலும், 2021 க.பொ.த. உயர் தரப் பரீட்சை: 2022 ஜனவரி கடைசி வாரத்திலும் நடாத்த முடிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment