பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை 41 ஆயிரத்து 510 மாணவர்கள் தெரிவு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை 41 ஆயிரத்து 510 மாணவர்கள் தெரிவு

2020 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளதுடன், 130 பாடங்களுக்காக இம்முறை 41 ஆயிரத்து 510 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இம்முறை பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 1399 ஆல் அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகளின் போது அம்மாணவர்கள் தொகையை பத்தாயிரத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் அந்த எண்ணிக்கைக்கு மேலதிகமாக இம்முறை மேலும் 1399 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அதேவேளை இம்முறை பல்கலைக்கழகத் தொகுதிக்கு 16 பட்டப்படிப்பு பாடப்பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் மேற்படி பாடங்களுடன் சில பல்கலைக்கழகங்களில் உள்ள 4 பட்டப்படிப்பு பாடநெறிகள் சில பல்கலைக்கழகங்களில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தின் உயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை நடவடிக்கைகள் அடுத்த வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் ஒரு மாத காலத்தில் அந்த நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment