பாகிஸ்தானிடம் 38 மில்லியன் டொலர்களை இழப்பீடாக கோரும் சீனா - News View

About Us

About Us

Breaking

Monday, October 18, 2021

பாகிஸ்தானிடம் 38 மில்லியன் டொலர்களை இழப்பீடாக கோரும் சீனா

(ஏ.என்.ஐ)

பாகிஸ்தானில் முன்னெடுக்கப்படுகின்ற தாசு அணை திட்டத்தில் இறந்த பொறியாளர்களுக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என சீன கோரிக்கை விடுத்துள்ளது.

இடைநிறுத்தப்பட்டுள்ள தாசு நீர் மின் திட்டத்தின் பணியை மீண்டும் தொடங்குவதற்கு முன் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

கடந்த ஜூலை 14 ஆம் திகதி ஒன்பது சீன பொறியியலாளர்கள், இரண்டு உள்ளூர்வாசிகள் மற்றும் எல்லைப்புற இரண்டு பணியாளர்கள் உட்பட பதின்மூன்று பேர் விபத்தில் உயிரிழந்தனர்.

இந்த விபத்தானது அணை திட்டத்தில் பணிபுரியும் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து காருடன் மோதி பள்ளத்தில் விழுந்ததது. குறித்த காரில் வெடி பொருட்கள் இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சீன நாட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து உயர் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

பாக்கிஸ்தான் வெளியுறவு அமைச்சு, நிதி அமைச்சு, உள்துறை அமைச்சு, நீர் வள அமைச்சு மற்றும் சீன தூதரகம் ஆகியவை இழப்பீட்டு வழங்குதல் குறித்து நெருக்கமாக செயற்பட்டு வருகின்றன.

நீர் வளத்துறை செயலக தகவல்கள் கூறுகையில், இழப்பீடு பிரச்சினை ஓரிரு வாரங்களுக்குள் தீர்க்கப்படும் என்றும் அணைத்திட்ட பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment