200 இற்கும் குறைவான மாணவர் கொண்ட பாடசாலைகளை திறக்க அனைத்து மாகாண ஆளுநர்களும் முடிவு - News View

Breaking

Tuesday, October 5, 2021

200 இற்கும் குறைவான மாணவர் கொண்ட பாடசாலைகளை திறக்க அனைத்து மாகாண ஆளுநர்களும் முடிவு

நாட்டிலுள்ள 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட, மாகாண சபைகளின் கீழ் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வியமைச்சு அதிகாரிகளுடன் அனைத்து மாகாண ஆளுநர்கள் இன்று முன்னெடுத்த கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை ஒக்டோபர் 21 இல் மீண்டும் திறக்க அனைத்து மாகாண ஆளுநர்களும் முடிவு செய்துள்ளனர்.

ஏனைய பிரிவுக்கான வகுப்புகளின் ஆரம்ப திகதி தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும்.

நான்கு நிலைகளில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டத்தின் கீழ் தரம் 1 முதல் 5 வரை 3884 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்.

No comments:

Post a Comment