டி-20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு - News View

Breaking

Sunday, October 10, 2021

டி-20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு

2021 டி-20 உலகக் கிண்ணத்துக்கான இறுதி 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறும் டி-20 உலகக் கிண்ணத்துக்கான இறுதி 15 வீரர்களை கொண்ட இலங்கை அணி நேற்றையதினம் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

இந்த அணிக்கு தசுன் ஷானக தலைவராக இருப்பார், தனஞ்சய டி சில்வா துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாத்தும் நிசங்க, லஹிரு குமார, அகில தனஞ்சய மற்றும் பினுரா பெர்னாண்டோ ஆகியோர் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

உலகக் கிண்ணத்துக்காக தகுதிச் சுற்று போட்டிகளில் இலங்கை 18 ஆம் திகதி நமீபியாவையும், 20 ஆம் திகதி அயர்லாந்தையும் மற்றும் 22 ஆம் திகதி நெதர்லாந்தையும் எதிர்கொள்கிறது.

தகுதிச் சுற்றிலிருந்து முன்னேற இலங்கை இந்த மூன்று ஆட்டங்களிலும் இரண்டில் வெற்றி பெற வேண்டும்.

இலங்கை அணி
தாசுன் ஷனக (தலைவர்), தனஞ்சய டிசில்வா (துணைத் தலைவர்), குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, சரித் அசலங்க, அவிஷ்க பெர்னாண்டோ, பதும் நிஷாங்க, வனிந்து ஹசரங்க, மஹேஷ் தீக்ஷண, அகில தனஞ்சய, சமிக கருணாரத்ன, லஹிரு குமார, துஷ்மந்த சமீர மற்றும் பினுர பெர்னாண்டோ.

No comments:

Post a Comment