இலங்கையில் 18 வயது பூர்த்தியானவுடன் வாக்குரிமை : நாடாளுமன்றில் சட்ட மூலம் முன்வைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 9, 2021

இலங்கையில் 18 வயது பூர்த்தியானவுடன் வாக்குரிமை : நாடாளுமன்றில் சட்ட மூலம் முன்வைப்பு

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்தவுடன், இளைஞர்களுக்கு வாக்குரிமையை வழங்கும் பொருட்டு வாக்காளர்களைப் பதிவு செய்யும் சட்டமூலத்தை பாராளுமன்றில் முன்வைத்துள்ளதாகச் சபை முதல்வரான அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சபை முதல்வர் காரியாலயம் இதனைத் தெரிவித்துள்ளது.

18 வயது பூர்த்தியடையும் இளைஞர்களின் பெயர் உள்ளடங்கிய வாக்காளர் பெயர்ப் பட்டியலை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தயாரிக்க இதன் மூலம் சந்தர்ப்பம் கிட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நடைமுறையில் உள்ள முறைமைக்கு அமைய, ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு சில தினங்களுக்கு முன்னரோ அல்லது, அதன் பின்னரோ 18 வயது பூர்த்தியடையும் இளைஞர்கள், அடுத்த ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் இடம்பெற்றால், அதில் வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுவதில்லை.

இந்த நிலையில், அதில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சபை முதல்வர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

தினகரன் 

No comments:

Post a Comment