குத்துச் சண்டை ஜாம்பவான் முஹம்மது அலி வரைந்த ஓவியங்களின் அரிதான தொகுதி ஒன்று சுமார் 1 மில்லியன் டொலருக்கு ஏலம் போயுள்ளது.
நியுயோர்க்கில் உள்ள பொன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த ஏலத்தில் 26 கலைப் படைப்புகள் ஏலம் போயுள்ளன.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியம் ஒன்று 425,000 டொலருக்கு விலை போனது. இது விற்பனைக்கு முன்னர் கணிக்கப்பட்டதை விடவும் 10 மடங்கு அதிகமாகும்.
உலகின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக புகழப்படும் அலி, ஒரு செயற்பாட்டாளர் மற்றும் கவிஞராகவும் அறியப்படுகிறார்.
எனினும் அவரது ஓவியம் தீட்டும் திறன் பெரிதும் அறியப்படாத ஒன்றாகவே இருந்துள்ளது.
அலியின் தந்தை ஒரு தொழில்முறை ஓவியராக இருந்த நிலையில் அவர் ஓவியம் தீட்டுவதற்கு அது ஊக்கமாக இருந்துள்ளது என்று பொன்ஹாம்ஸ் ஏல நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
விளையாட்டு ஓவியரான லேரோய் நயிமனிடம் இருந்தும் அவர் ஓவியம் பற்றி பாடங்கள் கற்றுள்ளார்.
No comments:
Post a Comment