ஜெனிவாவின் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளியோம் - அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் திட்டவட்டமாக அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 19, 2021

ஜெனிவாவின் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளியோம் - அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் திட்டவட்டமாக அறிவிப்பு

லியோ நிரோஷ தர்ஷன்

நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை உள்ளக பொறிமுறைகள் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இது ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும். இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கின்ற தற்காலிகமான பொறிமுறையை இலங்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்டுடன் நேற்று (19) நியூயோர்க்கில் இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பொன்றின் போதே ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், பொதுநலவாய அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் இலங்கை முன்னெச்சரிக்கையாகவும், அமைப்பின் கௌரவம், கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களுக்கு இணங்க அர்ப்பணிப்புடன் செயற்படும். பொதுநலவாய நாடுகளுடனான வணிகம், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளிலான ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.

உணவுப் பாதுகாப்பை மையமாகக் கொண்ட விவசாய உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தி அண்மையில் 'காலநிலை மற்றும் பசுமைப் பொருளாதாரம்' எனும் முன்முயற்சியை இலங்கை ஆரம்பித்துள்ளது.

தனித்துவமான மற்றும் உற்சாகமூட்டும் வகையில், அனைத்து உறுப்பு நாடுகளும் பொதுவான நோக்கமொன்றை அனுபவிக்கும் பன்முகத்தன்மையின் கலவையே பொதுநலவாயம் ஆகும் . அதன் உறுப்பினர்கள் அனைவரும் பொதுவானதொரு சட்டப் பின்னணியின் நன்மையைக் கொண்டுள்ளனர்.

எனினும் அபிவிருத்தியின் பல்வேறு வழிகளைப் பின்பற்றினர். நல்லிணக்கம் தொடர்பில் நாட்டில் உள்ள உள்ளூர் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

2019 இல் பொதுநலவாய சட்ட அமைச்சர்கள் மாநாட்டை நடத்தியமைக்காக இலங்கைக்கு நன்றிகளைத் தெரிவித்த அவர், வர்த்தகம், விளையாட்டு, இளைஞர்கள் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான இலங்கையின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பொதுநலவாய அமைப்பு பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment