மாலைதீவுக்கு மணல் கடத்தல்? “நிரூபித்துக் காட்டுங்கள் பதவி விலகுகின்றேன்” - சாணக்கியனுக்கு அமைச்சர் அமரவீர பகிரங்க சவால் - News View

Breaking

Wednesday, September 8, 2021

மாலைதீவுக்கு மணல் கடத்தல்? “நிரூபித்துக் காட்டுங்கள் பதவி விலகுகின்றேன்” - சாணக்கியனுக்கு அமைச்சர் அமரவீர பகிரங்க சவால்

மாலைதீவில் தீவொன்றை அமைப்பதற்காக, கிழக்கு மாகாணத்திலிருந்து மணல் திரட்டப்பட்டு, வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அமைச்சரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரோ ஈடுபட்டுள்ளார் என்பதை சாணக்கியன் நிரூபித்துக் காட்டினால், இந்த அமைச்சுப் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தாம் விலகுவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் கூறுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் மற்றும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற முறையில் தாம் தனது கருத்துக்களை முன்வைப்பதாகவும், நாட்டின் தற்போதைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கமைய நாட்டின் வளங்களை எந்த வகையிலும் சட்டவிரோதமாக வெளியிடவோ, விற்கவோ அல்லது கடத்துவதற்கோ முடியாது என்றும் அமரவீர கூறினார்.

ஒரு தீவை உருவாக்க வேண்டுமானால் எவ்வளவு மணலின் அளவு தேவை என்பதை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. அப்படியானால், கப்பல்கள் மூலமே நாட்டிற்கு வெளியே மணல் அனுப்பப்பட வேண்டும், நாட்டின் சட்டங்களின் கீழ் சட்டவிரோதமாக அவ்வாறு செய்ய முடியாது என அமைச்சர் கூறினார். 

நமது கனிம வளங்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டுமானால், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாலைதீவில் நீர் வடிகட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடந்த பருவத்தில் ஆறரை க்யூப் மணல் அனுப்பப்பட்டதை அமைச்சர் இதன்போது வெளிப்படுத்தினார்.

இது ஒரு இலங்கை நிறுவனத்தால் அனுப்பப்பட்டது. இதற்கான அனைத்து வரிகளும் வசூலிக்கப்பட்டுள்ளன என்றார்.

நம் நாட்டின் கனிம வளங்கள் நிறுவனம் ஒன்றினால் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அதிலிருந்து நாடு வருவாயைப் பெறுகிறது என்றும் அவர் கூறினார்.

எந்த சூழ்நிலையிலும் நம் நாட்டிலிருந்து மணலை ஏற்றுமதி செய்ய உரிமம் வழங்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

எனவே, இதுபோன்ற மோசடி எதுவும் நடக்கவில்லை என்று நான் பொறுப்புடன் கூறுகிறேன் என்று அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment