மன்னாரில் குடிபோதையில் வீட்டினுள் நுழைந்த கும்பல் - இரண்டு யுவதிகள் உட்பட மூவர் படுகாயம்! - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

மன்னாரில் குடிபோதையில் வீட்டினுள் நுழைந்த கும்பல் - இரண்டு யுவதிகள் உட்பட மூவர் படுகாயம்!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் குறித்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் கடுமையாக தாக்கி சென்றுள்ளனர்.

இதன் போது குறித்த வீட்டின் உரிமையாளரான அன்ரனி ஜோசப் (வயது-44) என்பவரை கடுமையாக தாக்கியதன் காரணமாக கடும் காயம் அடைந்த குறித்த குடும்பஸ்தர் பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த வீட்டில் உள்ள 18 வயதுடைய இதய நோய் உள்ள யுவதி ஒருவரையும், 15 வயதுடைய மாணவி ஒருவரையும் தாக்கியுள்ளதுடன், குறித்த இரு யுவதிகளும் தற்போது பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் காரணமாக வீட்டில் உள்ள இரு குழந்தைகள் அச்சமடைந்துள்ள நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீடு கடுமையான தாக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. நேற்றைய தினம் இரவு குறித்த பகுதிக்குச் சென்ற அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள அன்ரனி ஜோசப் (வயது-44) என்ற குடும்பஸ்தர் சுய நினைவற்ற நிலையில் உள்ளதாகவும் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment