ஊரடங்கை நீடிப்பதா, இல்லையா; அரசு உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைபடியே செயற்படுகிறது - மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது என்கிறார் அமைச்சர் ரமேஷ் - News View

Breaking

Tuesday, September 7, 2021

ஊரடங்கை நீடிப்பதா, இல்லையா; அரசு உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைபடியே செயற்படுகிறது - மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது என்கிறார் அமைச்சர் ரமேஷ்

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தே ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா, இல்லையா என கொவிட்19 கட்டுப்பாட்டு செயலணி முடிவெடுக்குமென இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நிபுணத்துவ மருத்துவர்களின் கூட்டத்தில் செப்டம்பர் 18 வரை நாட்டை மூடி வைத்தால் 7,500 மரணங்களை தடுக்கலாமெனவும் ஒக்டோபர் 02 வரை நீடித்தால் மேலும் பல மரணங்களை தடுக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்தினதும் நிபுணத்துவ மருத்துவர்களினதும் ஆலோசனை படியே செயற்படுகிறது. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் அதேவேளை கொரோனா தடுப்புக்கும் உச்ச நடவடிக்கை எடுத்து வருகிறது. 

மக்களின் பொருளாதார நிலைமை குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சகல முடிவுகளும் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணி எடுக்கும். 

ஜனாதிபதியினதும் சுகாதார தரப்பினரதும் கூடுதலான காலம் இவ்வாரான பிரச்சினைகள் தொடர்பிலே செலவிடப்படுகிறது. 

சகலரும் இணைந்து மக்களின் ஒத்துழைப்புடன் மரணங்களையும் தொற்றாளர் தொகைகளையும் குறைக்க முடியுமென எதிர்பார்க்கிறோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment