"நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்" - மெஹ்பூபா முஃப்தி - News View

Breaking

Tuesday, September 7, 2021

"நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்" - மெஹ்பூபா முஃப்தி

காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெஹ்பூபா முஃப்தி தாம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் தற்போது இயல்புநிலையில் இல்லை என்று தன்னிடம் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

"ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களின் உரிமைகளுக்காக இந்தியாவில் ஆளும் மத்திய அரசு கவலைப்படுகிறது. ஆனால், அதே அக்கறையை அது காஷ்மீரிகள் மீது வேண்டுமென்றே காட்ட மறுக்கிறது. காஷ்மீரில் இயல்புநிலை இல்லை என்று உள்ளூர் நிர்வாகத்தினர் என்னிடம் கூறுகின்றனர். அப்படியென்றால், மத்திய அரசு இயல்புநிலை இருப்பதாக போலியாக கூறி வருவது வெளிப்பட்டு விட்டது," என்று மெஹ்பூபா முஃப்தி கூறியுள்ளார்.

Social embed from twitter

No comments:

Post a Comment