இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு - தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக வீழ்ச்சி - பயமின்றி விரைவில் நாட்டை திறக்க முடியும் - News View

About Us

About Us

Breaking

Friday, September 10, 2021

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு - தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக வீழ்ச்சி - பயமின்றி விரைவில் நாட்டை திறக்க முடியும்

தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

இன்று (10) முற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொவிட்-19 ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தை தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக அமைச்சர் கெஹெலிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வித பயமும் இன்றி நாட்டை மிக விரைவாக திறக்க முடியுமென அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடுப்பூசி செலுத்தாதோர் இக்காலப் பகுதியில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர், எப்போதும் முகக்கசவசத்தை அணியுமாறும், வீட்டிலேயே தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் கொவிட்-19 தொடர்பான தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment