இலங்கையில் 95.8% ஆனோரின் தொற்றுக்கு டெல்டா திரிபே காரணம் - சில மாகாணங்களில் 84% - 100% : வெளியானது ஆய்வறிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, September 10, 2021

இலங்கையில் 95.8% ஆனோரின் தொற்றுக்கு டெல்டா திரிபே காரணம் - சில மாகாணங்களில் 84% - 100% : வெளியானது ஆய்வறிக்கை

இலங்கையில் 95.8% ஆன கொவிட்-19 தொற்றாளர்களுக்கு ஏற்பட்டிருப்பது டெல்டா திரிபு என, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவினால் (AICBU) வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் வெவ்வேறு SARS-CoV-2 திரிபுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.

கொவிட்-19 ஐ கட்டுப்படுத்துவது தொடர்பான பொருத்தமான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக, இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் வெவ்வேறு SARS-CoV-2 திரிபுகளின் மாற்றத்தை கண்டறிவது அவசியமென்பதன் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் நீலிகா மலவிகே, வைத்தியர் சந்திம ஜீவந்தர உள்ளிட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக (USJ) ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மூலக்கூறு மற்றும் மூலக்கூற்று மருத்துவத் பிரிவின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வு, 95.8% ஆனோருக்கான தொற்றுக்கு காரணம் டெல்டா திரிபே (Delta variant) என்பதைக் காட்டியுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் டெல்டா தொற்று பரவலானது, பல்வேறு மாகாணங்களில் 84% முதல் 100% வரை இருப்பதாக அதில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment