கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகித்து பொலிஸ் கான்ஸ்டபிள் தற்கொலை - News View

About Us

About Us

Breaking

Friday, September 10, 2021

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகித்து பொலிஸ் கான்ஸ்டபிள் தற்கொலை

எம்.எப்.எம்.பஸீர்

தான் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகித்து, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொழும்பு - முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில், பயிற்சிக்கால பொலிஸ் கான்ஸ்டபிளாக கடமையாற்றிய 24 வயதுடைய பதுளை - ராகல பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தனக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக எண்ணுவதாகவும், அதனால் தன்னுடன் ஒன்றாக பழகும் ஏனைய பொலிஸ் நண்பர்களுக்கும் அது தொற்றலாம் என நினைப்பதால் தான் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் குறித்த கான்ஸ்டபிள் கடிதம் ஒன்றினை எழுதி வைத்திருந்த நிலையில் குறித்த கடிதம் மீட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

முகத்துவாரம் பொலிஸ் நிலைய தங்குமிட, கழிவரையில் தனது போர்வையை உபயோகித்து நேற்று மாலை 5.30 மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த மார்ச் 15 ஆம் திகதியே, பொலிஸ் கல்லூரியில் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளதுடன் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதியே முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா, இன்று ஸ்தலத்துக்கு சென்று நீதிவான் நீதிமன்ற விசாரணைகளை ஆரம்பித்ததுடன், சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment